புதுடில்லி: ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக முதன்முதலாக அறிவிக்கப்பட்டு பரபரப்பினை ஏற்படுத்திய தேசியவாத காங். கட்சியைச் சேர்ந்த பி.ஏ.சங்மா , அக்கட்சியிலிருந்து திடீரென விலகியுள்ளார். ஆயினும் தான் வேட்பாளராக தொடர்ந்து நீடிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனால் டில்லி அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தற்போது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் முடிவு எடுக்காமல் திணறி வரும் நிலையில் சங்மாவை , தே.ஜ. கூட்டணி ஆதரிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் போட்டியிட விரும்பவில்லை என தெரிவித்துவிட்டார். இதனால் பிரணாப்-சங்மா இடையேயான போட்டி ஜனாதிபதி தேர்தலில் உறுதியாகி வருகிறது. பா.ஜ. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் பட்சத்தில் ஜனாதிபதி தேர்தல்களம் டில்லி அரசியலை திருப்புமுனையை ஏற்படுத்தும்.
விலகினர் சங்மா: இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பி.ஏ.சங்மாவிற்கு , போட்டியிலிருந்து விலகுமாறு தொடர் நெருக்கடி ஏற்பட்டு வந்ததாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் போட்டியிடுவதில் சங்மா உறுதியாக உள்ளார். இதனால் சங்கமா தேசியவாத காங்.கட்சியிலிருந்து விலக முடிவு செய்தார். அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது.
சுப்ரமணிசாமி-சங்கமா சந்திப்பு:இதற்கிடையே தே.ஜ. கூட்டணியில் உள்ள ஜனதா கட்சித்தலைவர் சுப்ரமணியசாமி , சங்மாவை சந்தித்து விவாதித்தார். தற்போதைய அரசியல் சூழ்நிலையில், பா.ஜ.வின் நிலைப்பாட்டை தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.பின்னர் பி.ஏ.சங்மா , தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார். இதனால் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
தே.ஜ. கூட்டணி வேட்பாளரா?: இனி பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சங்மாவை ஆதரிப்பதில் பிரச்னை இருக்காது என்றே தெரிகிறது. ஏனெனில் பா.ஜ மூத்த தலைவர் அத்வானி கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை வந்த போது, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்.அப்போது சங்மாவிற்கு ஆதரவு குறித்து தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை . எனினும் தற்போது சங்மாவிற்கு இரு மாநில கட்சிகளான அ.தி.மு.க., பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ஆதரவும் இருப்பதாலும், முன்னதாக தெலுங்குதேச கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடுவையும், சங்மா சந்தித்து ஆதரவு கோரியிருந்ததாகலும் சங்மா ஆதரவு அதிகரித்துள்ளது.
எனவே தே.ஜ. கூட்டணியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக சங்மா அறிவிக்கப்படலாம் எனவும், இன்று மாலை நடக்க உள்ள கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளராக பி.ஏ.சங்மா நிறுத்தப்படலாம் எனவும் தெரிகிறது.