தமிழ் திரையுலகம் மட்டுமின்றி அனைவரது எதிர்பார்ப்பையும் பெற்றுள்ள திரைப்படம் கோச்சடையான். இந்தப் படத்தை ரஜினியின் மகள் சௌந்தர்யா இயக்குகிறார். படத்தில் திபீகா படுகோனே, சரத்குமார், நாசர், ஆதி என நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு அனைத்தும் நிறைவடைந்த நிலையில் படத்தின் அடுத்த கட்ட பணிகள் நடந்து வருகின்றன. தற்போது கோச்சடையான் திரைப்படத்தில் யாருமே அறியாத தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. படத்தில் ரஜினி, இரு வேடங்களில் நடித்துள்ளார். அது என்ன வேடம்னா? அப்பா, மகன் வேடம்தான். முத்து திரைப்படத்திற்கு பிறகு இந்தப் படத்தின் மூலம் ரஜினி மீண்டும் அப்பா, மகன் கேரக்டரை ஏற்றுள்ளார். கதைப்படி ரஜினி, ஜாக்கி ஷெராப், நாசர் ஆகியோர் மன்னர்கள். இதில் மன்னர்களாகிய ரஜினிக்கும், ஜாக்கி ஷெராப்புக்கும் இடையே சண்டை நடக்கிறது. இந்த சண்டை அடுத்த தலைமுறையிலும் தொடர்கிறது. ரஜினியின் மகனுக்கும்(ரஜினி), ஜாக்கி ஷெராப் மகனான ஆதிக்கும் நடக்கும் சண்டையில் யார் வெற்றி பெற்றார்கள்? எப்படி வெற்றி பெற்றார்கள் என்பதுதான் படத்தின் கதை. அனைவரது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய கோச்சடையான் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.