டோக்கியோ: ஜப்பான் நாட்டின் பசிபிக் கடற்கரையோரம் மோரியோகா தென்கிழக்கு பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த ஆய்வின் படி ரிக்டர் அளவு கோலில் 6.4 என நிலநடுக்கம் பதிவானதாகவும் 115 கி.மீ. தொலைவில் உள்ள மோரியோகாவில் நடந்ததாகவும் தெரிகிறது. மேலும், சேதம் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. சுனாமி எச்சரிக்கை ஏதும் அறிவிக்கப்படவில்லை என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
சென்னை: சென்னையில் தற்போது திடீர் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னை மெரீனா கடற்கரை, பட்டினபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் கடல் சீற்றத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சீற்றத்தால் பல அடி உயரத்திற்கு கடல் அலை எழுவதால் மணற்பரப்பிலும் கடல் நீர் புகுந்தது. -KRK NETWORK-