பெட்ரோல் விலை உயர்வு, அதிகரிக்கும் பணவீக்கம் உள்ளிட்டவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ., சார்பில் இன்று நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக போபாலில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தவறான கொள்கைகள் மற்றும் ஊழல் ஆகியவற்றை கண்டித்து கட்சி தலைமையிடம் முன் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் முன்னாள் முதல்வர்கள் சுந்திர்லால் பட்வா, கைலாஷ் ஜோஷி ஆகியோர் ஈடுபட்டனர். இதனால் போலீசார் அவர்களை கைது செய்தனர். இவர்களுக்கு தற்காலிக சிறை தண்டனை அளிக்கப்படுவதாக கூடுதல் மாவட்ட நீதிபதி உமாசங்கர் பார்கவா உத்தரவிட்டுள்ளார். முன்னதாக காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசிற்கு எதிராக பா.ஜ., சார்பில் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.