மன்மதன் வெற்றியை தொடர்ந்து அதன் 2ம் பாகமாக மன்மதன்-2 எடுக்க சிம்பு திட்டமிட்டு வருகிறார். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க போவதாக கூறப்படுகிறது. கடந்த 2004ம் ஆண்டு சிம்பு எழுதி, திரைக்கதை அமைத்த படம் மன்மதன். ஆண்களை ஏமாற்றும் பெண்களை மயக்கி அவர்களை கொலை செய்யும் மன்மதனாக நடித்திருந்தார் சிம்பு. சிம்புவின் வித்தியாசமான நடிப்பில் சூப்பர் ஹிட்டானது இப்படம்.
இந்நிலையில் இப்படத்தின் 2ம் பாகத்தை எடுக்க சிம்பு தயாராகி வருகிறார். இதில் இப்படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மானை அணுகியுள்ளார். ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் பாடல்கள் மாபெரும் ஹிட்டாகின. அதன் வெளிப்பாடாக தன்னுடைய மன்மதன்-2விற்கும் ஏ.ஆர்.ரஹ்மானையே இசையமைக்க சிம்பு நினைக்கிறார். இதுதொடர்பாக ஏற்கனவே சிம்பு ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்து பேசிவிட்டாராம். அவரும் ஓ.கே., சொன்னதாக கூறப்படுகிறது. இருந்தும் மீண்டும் ஒருமுறை ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்து முழு சம்மதத்தை வாங்க திட்டமிட்டு வருகிறார் சிம்பு.
மன்மதன்-2 படத்தை சிம்புவே கதை எழுதி, இயக்கி, பாடல் எழுதி, நடித்து கூடவே தயாரிக்கவும் இருக்கிறார். விரைவில் இப்படம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது. -KRK NETWORK-