பெப்சி அமைப்புக்கு இன்று(19.06.12) நடந்த தேர்தலில் டைரக்டர் அமீர் வெற்றி பெற்றார். தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் எனப்படும் பெப்சியில் 23 சங்கங்களை சேர்ந்த சுமார் 25 ஆயிரம் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்புக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கிறது. அதன்படி 2012-14ம் ஆண்டுக்கான தேர்தல், சென்னை வடபழனியில் உள்ள பெப்சி அமைப்பில் இன்று(19.06.12) நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு டைரக்டர்கள் விசு மற்றும் அமீரும், பொதுச்செயலாளர் பதவிக்கு ஜி.சிவா, உமாசங்கர் பாபு ஆகிய இருவரும் போட்டியிட்டனர். ஓட்டுபதிவு காலை 9மணி முதல் நடந்தது. இதில் மொத்தம் பதிவான 65 ஓட்டுகளில் டைரக்டர் அமீருக்கு 37 ஓட்டும், விசுவுக்கு 28 ஓட்டும் கிடைத்து இருக்கிறது. இதன்மூலம் டைரக்டர் அமீர் 9 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார். அதேப்போல் பொதுச்செயலாளர் பதவிக்கு சிவாவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சம்பள ஊதியம் தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கும், பெப்சிக்கும் இடையே பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் ஒரு சுமூக முடிவு எட்டப்படாத நிலையில், பெப்சி அமைப்புக்கு இந்த தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏற்கனவே பெப்சி அமைப்புக்கு அமீர் ஆரம்பத்தில் இருந்தே குரல் கொடுத்து வருவதால் இந்த வெற்றி பெப்சி அமைப்பினர் இடையே ஒரு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி தந்துள்ளது.