தமிழ்நாட்டில் முன்னணி டி.வி., சேனலாக உருவெடுத்து இருக்கும் விஜய் டி.வி., ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சினிமா நட்சத்திரங்களை கவுரவிக்கும் வகையில் விஜய் டி.வி., விருதுகள் என்ற பெயரில் விருது வழங்கி வருகிறது. நேரடியாக ரசிகர்கள் மூலம் ஓட்டெடுப்பு நடத்தி விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி 2011ம் ஆண்டுக்கான தமிழ் சினிமா விருதுக்கான நட்சத்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் சிறந்த நடிகருக்கான விருது தெய்வத்திருமகள் படத்திற்காக விக்ரமுக்கும், சிறந்த நடிகைக்கான விருது எங்கேயும் எப்போதும் படத்திற்காக அஞ்சலிக்கும், பிடித்தமான ஹீரோவுக்கான விருது அஜித்துக்கும், பிடித்துமான ஹீரோயினுக்கான விருது அனுஷ்காவுக்கும், சிறப்பு விருதாக செவாலிய சிவாஜி கணேசன் விருது பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கும் வழங்கப்பட்டது.
சிறப்பு விருதுகள் :
செவாலிய சிவாஜி விருது - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
சிறப்பு விருது - பேபி சாரா (தெய்வத்திருமகள்)
பிற விருது பெற்றவர்கள் விபரம்:
பிடித்த நடிகர் - அஜித்
பிடித்த நடிகை - அனுஷ்கா
பிடித்த படம் - கோ
சிறந்த பொழுதுபோக்கு நடிகர் - தனுஷ்
சிறந்த நடிகர் - விக்ரம் (தெய்வத்திருமகள்)
சிறந்த நடிகை - அஞ்சலி (எங்கேயும் எப்போதும்)
சிறந்த டைரக்டர் - வெற்றிமாறன் (ஆடுகளம்)
சிறந்த படம் - எங்கேயும் எப்போதும்
சிறந்த இசையமைப்பாளர் - ஜீ.வி.பிரகாஷ் குமார் (ஆடுகளம்)
சிறந்த துணை நடிகர் - சரத்குமார் (காஞ்சனா)
சிறந்த துணை நடிகை - உமா ரியாஸ் (மவுன குரு)
சிறந்த புதுமுக நடிகர் - நானி (வெப்பம்)
சிறந்த புதுமுக நடிகை - ரிச்சா கங்கோபாத்யாயே (மயக்கம் என்ன)
சிறந்த காமெடி நடிகர் - சந்தானம் (தெய்வத்திருமகள், சிறுத்தை)
சிறந்த காமெடி நடிகை - கோவை சரளா (காஞ்சனா)
சிறந்த எடிட்டிங் - கிஷோர் (எங்கேயும் எப்போதும்)
சிறந்த சண்டை அமைப்பாளர் - திலீப் (ஆரண்யகாண்டம்)
சிறந்த கலை இயக்குநர் - சீனு (வாகைசூட வா)
சிறந்த திரைக்கதை - தியாகராஜா குமாரராஜா (ஆரண்யகாண்டம்)
சிறந்த வசன அமைப்பு - சமுத்திரகனி (போராளி)
2011-ம் ஆண்டுக்கான விருதுக்குரிய நட்சத்திரங்கள் மற்றும் படங்களை ரசிகர்கள் தேர்வு செய்தனர். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யூகிசேது, நடிகைகள் நதியா, லிசி, ஒளிப்பதிவாளர் ரத்தினவேல் ஆகியோர் நடுவர்களாக இருந்தார்கள். இந்த விழாவில் கமலின் விஸ்வரூபம் படத்தின் டிரெய்லரும் வெளியிடப்பட்டது. விழாவில் தனுஷ், அஞ்சலி, ஸ்ரேயா, வேதிகா உள்ளிட்டோரின் நடன நிகழ்ச்சியும் நடந்தது. -KRK NETWORK-