தமிழ் சினிமாவில் யாருமே வாய்ப்பு கொடுக்காமல் வடிவேலுவை ஒதுக்கி வைத்துள்ள நிலையில், டைரக்டர் ஷங்கர் அவருக்கு வாய்ப்பு கொடுக்க இருக்கிறார். அரசியல் பிரச்னைகள், தனிப்பட்ட பிரச்னைகள் உள்ளிட்ட காரணங்களால் வடிவேலு எந்த படங்களிலும் நடிக்க முடியாமல் இருந்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த மறுபடியும் ஒரு காதல் படத்தில் கூட காமெடியில் அசத்தி இருந்தாலும் கூட இப்படம் நீண்ட இடைவெளிக்கு முன் எடுக்கப்பட்ட படமே.
இந்நிலையில், ஷங்கர் தன் சொந்த பட நிறுவனம் மூலம், எஸ். பிக்சர்ஸ் சார்பில் காதல், கல்லூரி, இம்சை அரசன் 23ம் புலிகேசி, ரெட்டைச்சுழி உள்ளிட்ட படங்களை எடுத்தார். அதில் சில படங்கள் தோல்வியை சந்தித்தால் கொஞ்சம் காலம் பட தயாரிப்பை நிறுத்தி இருந்தார்.
இந்நிலையில் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை சிம்புதேவன் இயக்குவதாகவும், அதில் ஹீரோவாக வடிவேலுவே நடிப்பார் என்றும், அதை ஷங்கரே தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வந்தன. அதுஇப்போது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. சமீபத்தில் டைரக்டர் சிம்புதேவன் திருமண விழாவில் கலந்து கொண்ட டைரக்டர் ஷங்கர், அங்கு வந்த சினிமா பிரபலங்களோடு மனம்விட்டு பேசியிருக்கிறார். பின்னர் சிம்புதேவனுடன் நீண்ட நேரம் அமர்ந்து பேசியுள்ளார் ஷங்கர். சிம்புதேவன் தனது உதவியாளர் என்பதால் கூடுதல் அக்கறை எடுத்து கொண்ட ஷங்கர் தயாரிப்பு பொறுப்பை ஏற்க ஓ.கே., சொன்னதும், இயக்குநர் சிம்புதேவன் கல்யாண மகிழ்ச்சியோடு மதுரையிலேயே கதை விவாதத்தில் உட்கார்ந்து விட்டாராம். -KRK NETWORK-