குற்றாலம் அருவிகளில் ஞாயிற்றுக்கிழமை தண்ணீர் அதிகரித்தது. ஐந்தருவியில் 5 கிளைகளிலும் தண்ணீர் கொட்டியது.
குற்றாலத்தில் சனிக்கிழமை பிற்பகல் முதல் அவ்வப்போது சாரல் மழையும், மிதமான வெயிலும் மாறிமாறி நிலவியது. இதனால் பேரருவியில் தண்ணீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை காலை முதல் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் ஐந்தருவியில் 6 மணிக்குமேல் தண்ணீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. சிறிதுநேரத்தில் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் கொட்டியது.
தொடர்ந்து சாரல் பெய்து வருவதால் பேரருவியிலும் தண்ணீர் அதிகரித்துள்ளது.