குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிப்பது என்ற முடிவை தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், குடியரசுத் தலைவர் தேர்தலை தே.மு.தி.க. புறக்கணிக்க முடிவெடுத்திருப்பதாக விஜயகாந்த் அறிக்கை விட்டிருப்பது எங்களுக்கு வருத்தத்தை தருகிறது. அவர் புறக்கணிப்பதற்காக சொல்லியிருக்கிற காரணங்கள் பல தமிழக காங்கிரஸ் கட்சி, தமிழக நலனிற்காக குரல் எழுப்புகிற பிரச்னைகள் தான். அதற்காக யார் குடியரசுத் தலைவராக வந்தால் நமக்கென்ன என்கிற சித்தாந்தம் நல்லதல்ல.
தேசியத்தை தன் கட்சியிலேயே இணைத்திருக்கும் விஜயகாந்த் தனதுமுடிவை மறுபரிசீலனை செய்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். -KRK NETWORK-