இந்தூர்: நாட்டின் உயரிய பதவியில் ஒரு முறை இருந்துள்ளேன். அந்த அனுபவமே எனக்கு போதும் என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். ம.பி., மாநிலம் இந்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவரிடம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கலாம், நான் ஒருமுறை நாட்டின் உயரிய பதவியில் இருந்துள்ளேன். அந்த அனுபவமே எனக்கு போதும் என்று தெரிவித்துள்ளார். மேலும், ஒவ்வொரு துறையிலும் தலைவர் பதவிக்கு வருவதற்கு பல வழிகள் உள்ளன. அத்தகைய திறமை உள்ள நபர்கள் உயர்பதவிக்கு வர வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும் என்றும் கூறினார். நாட்டிற்கு நன்மை செய்யும் ஒரு நபரை நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து தேர்ந்தெடுக்க வேண்டும். இந்திய அரசியல் வளர்ச்சி பெற வேண்டும் என்றும் கலாம் கேட்டுக்கொண்டார்.