குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அப்துல் கலாம் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தனது மனசாட்சி தன்னை போட்டியிட அனுமதிக்கவில்லை என்றார்.
மேலும் என்மீது நம்பிக்கை வைத்த மமதா பானர்ஜிக்கு நன்றிகூற விரும்புகிறேன். தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்தில்கொண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவுசெய்துள்ளேன் என்று கலாம் தெரிவித்தார்.
கலாமின் இந்த அறிவிப்பின்மூலம் அவர் போட்டியிடுவாரா மாட்டாரா என்று பலநாட்களாக நீடித்துவந்த இழுபறி நிலைமைக்கு முடிவு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக அவரைப் போட்டியிட வைக்க பாஜகவும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் தீவிர முயற்சி மேற்கொண்டன.
இன்று காலை இதுதொடர்பாக கலாமிடம் பாஜக தலைவர் அத்வானி தொடர்புகொண்டு பேசினார். எனினும் கலாம் தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாயின. இந்த நிலையில் அதை உறுதிப்படுத்தும்விதமாக தேர்தலில் போட்டியிடவில்லை என்று கலாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.