மதுரை:""மதுரை ஆதீனம் சந்தோஷமாக உள்ளதோடு, எனக்கு பக்கபலமாகவும் உள்ளார். பிரச்னைகளில் இருந்து, விரைவில் வெளிவருவேன். கடவுள் மீதும், நீதித்துறை மீதும், நம்பிக்கை இருக்கிறது,'' என, மதுரையில் நித்யானந்தா கூறினார்.
பெங்களூரு ஆசிரமத்தில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக, கைதான மதுரை இளைய ஆதீனம் நித்யானந்தா, ஜாமின் பெற்று, நேற்று முன்தினம் ( ஜூன் 16) அதிகாலை மதுரை வந்தார்.
அவரை, பட்டாசு வெடித்து, மதுரை ஆதீனம் மற்றும் சீடர்கள் வரவேற்றனர். மாலையில், இருவரும் அழகர் கோவில் உட்பட, நகரை சுற்றியுள்ள பகுதிகளுக்கு, "விசிட்' அடித்து விட்டு, மடத்திற்கு திரும்பினர். எங்கு சென்றனர் என்பது குறித்து, ரகசியம் காக்கப்படுகிறது.

இதற்கிடையே, நேற்று நித்யானந்தா கூறியதாவது:ஆசிரமத்தில் சோதனையிட்ட ராம் நகர் போலீசார், எனக்கு எதிராக, எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்துள்ளனர். அங்கு, சுற்றுச் சுவர் அருகே கண்டெடுக்கப்பட்ட ஆபாசப் புத்தகங்கள் மற்றும் பொருட்கள், சமூக விரோதிகளால் வீசப்பட்டவை.மதுரை ஆதீனம் சந்தோஷமாக உள்ளதோடு, எனக்கு பக்கபலமாகவும் உள்ளார். பிரச்னைகளில் இருந்து, விரைவில் வெளிவருவேன். கடவுள் மீதும், நீதித்துறை மீதும், நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.