ஐதராபாத்: சுரங்க மோசடி வழக்கில் சிக்கிய ஆந்திராவை சேர்ந்த மாபெரும் பணக்காரரும், மாஜி அமைச்சருமான, மாநில அரசையே ஆட்டி வைக்கும் ரெட்டி சகோதரர்களில் ஒருவரான ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமின் வழங்கிட ரூ. 10 கோடி பேரம் பேசிய சி.பி.ஐ., நீதிபதி இன்று கைது செய்யப்பட்டார்.
ஆந்திரா மற்றும் கர்நாடக எல்லையில் உள்ள ஒபலாபுரம் கனிம சுரங்கம் ஏலம் விடப்பட்டதில் முறைகேடு நடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதில் 100 கோடிக்கும் மேலாக இழப்பு ஏற்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து மாஜி அமைச்சர் ஜனாத்தனரெட்டி பதவியை இழந்ததும் சி.பி.ஐ,.அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.
சி.பி.ஐ.,சிறப்பு கோர்ட் நீதிபதி பட்டாபிராமராவ் இந்த வழக்கை விசாரித்து வந்தார். சிறையில் இருந்த ரெட்டி ஜாமின் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி சில தளர்வுகளை கையாண்டு சலுகைகள் வழங்கி இவரை ஜாமினில் விடுதலை செய்தார். ஏற்கனவே இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவருக்கு ஜாமின் மறுத்த நீதிபதி ரெட்டிக்கு மட்டும் ஜாமின் வழங்கியது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனை நுகர்ந்த சி.பி.ஐ., அதிரடி விசாரணையை துவக்கியது. இதனையடுத்து நீதிபதி பட்டாபி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து சி.பி.ஐ.,இவரது வீட்டில் ரெய்டு நடத்தியது. இதில் பணம் நீதிபதியின் மகன் மூலம் வங்கி கணக்கில் ரூ. 3 கோடி வரை பெறப்பட்டது தெரிய வந்தது. இதனை உறுதி செய்தி சி.பி.ஐ., நீ (நி) திபதி பட்டாபிராமை இன்று சி.பி.ஐ.,அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-KRK NETWORK-