குட்காவுன் : கடந்த 4 நாட்களுக்கு முன் ஆழ்துளை கிணற்றிற்குள் விழுந்த 4 வயது சிறுமி மகியை ராணுவத்தினர் போராடி மீட்டனர். 85 மணிநேரமாக மீட்புப்பணிகள் நடந்து வந்த நிலையில் மதியம் 1.45 மணியளவில் மகி மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட குழந்தை அங்கிருந்த ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மகியின் உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அரியானா மாநிலம் மானேசர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த மகி, 4 என்ற சிறுமி, கடந்த 20ம் தேதி இரவு, தன் வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, அருகில் இருந்த 70 அடி ஆழமுள்ள ஆழ் துளை கிணற்றில், தவறி விழுந்து விட்டாள். இந்த தகவல் தெரிய வந்ததும், மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று, சிறுமியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, ராணுவ வீரர்களும், அங்கு வந்தனர். சிறுமி விழுந்த இடத்துக்கு சற்று அருகில், மீட்பு குழுவினர் மிகப் பெரிய பள்ளத்தை தோண்டி மீட்புப்பணியை மேற்கொண்டனர்.. ஆழ் துளை கிணற்றுக்கு பக்கவாட்டில் தோண்டப்படும் இந்த பள்ளத்தின் வாயிலாக, சிறுமி இருக்கும் இடத்துக்கு சென்று, அவளை மீட்பதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டனர்.
ஆக்சிஜன் செலுத்தப்பட்டது: சிறுமி, சுவாசிப்பதற்காக ஆழ்துளை கிணற்றுக்குள், "ஆக்சிஜன்' செலுத்தப்பட்டது. நேற்று முன்தினம் காலையில், "இன்னும் சில மணி நேரத்தில் சிறுமியை மீட்டு விடுவோம்' என, மீட்பு குழுவினர் தெரிவித்தார். மாலையில் நிலைமை தலைகீழானது. சிறுமி விழுந்த துளையில் அருகில் மீட்பு குழுவினர் பள்ளம் தோண்டும் இடத்தில், கடினமான பாறைகள் நிறைந்திருப்பதால், விரைவாக பள்ளம் தோண்ட முடியவில்லை. இதனால், கடந்த நான்கு நாட்களாக 70 அடி பள்ளத்தில் சிக்கியிருக்கும் மகியின் கதி என்ன ஆகும் என கவலை உருவானது.
மீட்பில் தாமதம்: மகியை நெருங்க சில அடி தூரம் இருந்த நிலையில் அங்கு கடுமையான பாறைகள் இருந்ததால் மீட்டு பணியில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து இன்று காலை முதல் நடந்த மீட்பு முயற்சிக்குப்பின்னர் கடந்த 85 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மதியம் 1.45 மணியளவில் மகி மீட்கப்பட்டார். பின்னர் சிறுமி உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு முதலுதவி சிகி்ச்சைக்காக தயாராக நின்றிருந்த ஆம்புலன்ஸ் வேன் மூலம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி மகி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு கமிஷன் கண்டனம்: இதற்கிடையே அரியானா மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு கமிஷன் , மகி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவத்திற்கு காரணமான கிணற்றின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடு்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மேலும் இது போன்ற ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டால் பணி முடிந்தவுடன் உடனடியாக மூட வேண்டும் என ஏற்கனவே சுப்ரீம் உத்தரவிட்டிருந்ததை சுட்டிக்காட்டி அரியானா தலைமைச்செயலர் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கடிதம் எழுதியுள்ளது.