அஜீத் குமார் நடிப்பில் பில்லா-2 திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் அஜீத் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்புக்கு சென்றுவிட்டார். விஷ்ணுவர்த்தன் இயக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் நடந்து வருகிறது. இதனை அறிந்த ரசிகர்கள் அஜீத்தை காண அப்பகுதியில் பெருந்திரலாக கூடினர். மேலும் வாகனங்கள் மற்றும் சுவர்களில் ஏறியதால் பதற்றம் ஏற்பட்டது. நிலைமையை அறிந்த காவல்துறையினர் அப்பகுதிக்கு வந்து ரசிகர்களை கட்டுப்படுத்தினர். மும்பையில் நடக்கவிருந்த இந்தப் படப்பிடிப்பு அங்கு நிலவி வரும் சிதோஷ நிலை காரணமாக பெங்களூருக்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.