உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

19 June 2012

இன்றைய ராசி பலன்

மேஷம்: இன்று, நடக்குமோ, நடக்காதோ என நினைத்த காரியம் ஒன்று, நல்ல விதமாக நடக்கும். சில விஷயங்களில், மற்றவர்களை முந்திக் கொண்டு செயல்பட முற்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுகளைப் பெறுவீர்கள். தாய் வழி உறவுகள் மூலம் சில நன்மைகள் அடைவீர்கள். வழக்கு விவகாரங்களில், நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள்.


ரிஷபம்: இன்று, தர்ம, புண்ணிய காரியங்களில் நாட்டம் செல்லும். மருந்துப் பொருட்கள் வாங்க, கணிசமான பணத்தை செலவு செய்வீர்கள். தொழில் ரீதியாக சிலருக்கு உதவி செய்வீர்கள் அல்லது யோசனை சொல்வீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த முக்கிய செய்தி வந்து சேரும். சிறிய வேலை ஒன்றுக்கு, பலமுறை அலைய நேரிடலாம். மறதியால் அவதியுண்டு.


மிதுனம்: இன்று, நண்பர்கள் சிலர், உங்களைப் பாராட்டிப் பேசுவார்கள். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் அக்கறை காட்டுவீர்கள். நீங்கள் குறைவாக மதிப்பிட்ட ஒருவர் மூலம், பெரிய அளவில் உதவி கிடைக்கும். விருந்தினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பு குடிகொள்ளும். விருப்பமான உணவு வகைகளைச் சாப்பிடுவதில் நாட்டம் செல்லும்.


கடகம்: இன்று, காலை முதல் மாலை வரை பம்பரமாக சுழன்று பணியாற்றுவீர்கள். கனிவான பேச்சுகளால் சிலரிடம் காரியம் சாதிப்பீர்கள். எதிர்பார்த்த பண வரவுகள் மட்டுமின்றி, எதிர்பாராத பண வரவுகளையும் பெறுவீர்கள். பெண்கள் சிலர் மூலம் முக்கியமான உதவி கிடைக்கும். பகட்டான ஆடை, ஆபரணங்கள் அணிவதில் நாட்டம் செல்லும், பிரார்த்தனைகள் நிறைவேறும்.


சிம்மம்: இன்று, லட்சியங்களை நிறைவேற்ற துடிப்போடு செயல்படுவீர்கள். சில வேலைகளை அலைச்சல் இல்லாமல், இருந்த இடத்திலிருந்தே முடிப்பீர்கள். தம்பதியர் இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் பெருமைப்படும் வகையிலான சம்பவங்கள் நடக்கும். நண்பர் ஒருவரின் ரகசியத்தை அறிந்து கொள்வீர்கள். புதிய அனுபவம் கிடைக்கும்.

கன்னி: இன்று, பெருமை, ஜம்பத்திற்காக செலவு செய்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களை அடையாளம் கண்டு கொள்வீர்கள். கோவில்களுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொள்வீர்கள். சிறிய தவறு ஒன்று, பெரிய பிரச்னையாகி விடுமோ என, வீண் பயம் ஏற்படும்.

துலாம்: இன்று, உங்களின் உதவியுடன் நண்பர்கள் சிலர் வேலைகளை முடித்துக்கொள்வர். உறவினர்கள் தொடர்பான காரியங்களுக்காக அலைய நேரிடலாம். சிலரின் வருகையை எதிர்பார்த்து நீண்ட நேரம் காத்திருப்பீர்கள். பொறுப்பான வேலை ஒன்றை ஏற்றுக் கொள்வதால், அவதிகளுக்கு ஆளாவீர்கள். வாகன பயணங்களுக்காக கணிசமான பணம் செலவாகும்.

விருச்சிகம்: இன்று, விலை உயர்ந்த பொருட்கள் வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறும். வியாபாரிகள் வரவேண்டிய பாக்கிகள் வருவதால், மகிழ்ச்சி அடைவர். அரசு தொடர்பான காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்கு செல்வீர்கள். சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மனதில் ஊக்கம், உற்சாகம் ஏற்படும்.

தனுசு: இன்று, அண்டை, அயலாருடன் வீண் பேச்சுக்கள் பேசி நேரத்தை வீணடிப்பீர்கள். ஒரு செலவை நினைத்து கவலைப்படும் நேரத்தில், மற்றொரு செலவு உருவாகலாம். குடும்ப உறுப்பினர்கள் ஏட்டிக்குப் போட்டியாக நடந்து எரிச்சல் உண்டாக்குவார்கள். சிலருக்கு வாக்கு கொடுத்துவிட்டு, பின்னர் அதிலிருந்து பின் வாங்குவீர்கள்.

மகரம்: இன்று, பகட்டான ஆடைகள் அணிவதில் நாட்டம் செல்லும். முக்கிய விஷயங்களில் உங்களிடம் வாக்குக் கொடுத்த சிலர், அதைக் காப்பாற்றி பெருமை சேர்ப்பார்கள். சில வேலைகளை தாமதமாகத் துவங்கினாலும், சரியான நேரத்திற்கு முடிப்பீர்கள். உடற்பயிற்சி, தேக ஆரோக்கிய விஷயங்களில் அக்கறை காட்டுவீர்கள். பெண்கள் வழியில் உதவி கிட்டும்.

கும்பம்: இன்று, ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்க வேண்டிய நாள். சிலர் உங்களிடம் கடன் வாங்கலாம் அல்லது நீங்கள் சிலருக்கு கடன் கொடுக்கலாம். பல நாட்களாக தள்ளிவைத்த வேலை ஒன்றை அவசரமாக முடிக்க வேண்டிய கட்டாய நிலைமை உருவாகும். குடும்பத்தினரின் விமர்சனங்களுக்கு ஆளாவீர்கள். பொறுமை, நிதானம் அவசியம்.

மீனம்: இன்று, சொல்வாக்கை காப்பாற்றி செல்வாக்கு பெறுவீர்கள். நண்பர்கள் சிலருக்காக மற்றொருவரிடம் பரிந்து பேசுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி, சந்தோஷம் அதிகரிக்கும். தாய் வழியில் மனதிற்கு இனிய உதவிகள் கிடைக்கலாம். பொழுதுபோக்கு, உல்லாச விஷயங்களில் நாட்டம் செல்லும். எதிர்பாராத பணவரவு உண்டு.

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT