தமிழ் சினிமாவில் தற்போதைய லேட்டஸ் டாக் பவர்ஸ்டார் டாக்டர் சீனிவாசனை பற்றி தான். இதுவரை அவரை நடிகராகக் கூட யோசித்துப் பார்க்காதவர்கள், இப்போது அடடா என்று சொல்லும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார். ஏற்கெனவே 10 படங்களை கைவசம் வைத்திருக்கும் அவர், அடுத்து ஒரு படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருடன் இன்னொரு ஹீரோவாகிறார் சந்தானம். இந்த படத்திற்கு கண்ணா லட்டு திண்ண ஆசையா! என தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து சந்தானத்திடம் கூறும்போது, பவர் ஸ்டார் சீனிவாசன் கூட சேர்ந்து இந்தப் படத்தில் நான் நடிப்பது உண்மைதான். ஆனா, இன்னும் பல விஷயங்கள் முடிவாகவில்லை. முடிவான பிறகு அறிவிப்பு வெளியாகும். செம ஜாலியான படமா பண்ண திட்டமிட்டிருக்கோம்," என்றார்.