பில்லா-2 படத்திற்கு பிறகு நடிகர் அஜித் தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். அடுத்த படத்தில் மிக ஸ்லிம்மாகத் தோன்ற வேண்டும் என்பதற்காக தினமும் கடுமையான உடற்பயிற்சியில் இறங்கி இருக்கிறார் அஜித். விஷ்ணுவர்த்தன் இயக்க, நயன்தாரா ஜோடியாக நடிக்கும் இந்தப் படம் இந்தியில் வெளியான ரேஸ் படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது. படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.
படப்பிடிப்பு கடந்த 18ம்தேதி பெங்களூருவில் தொடங்கியது. இப்படத்தில் ஆர்யாவும் முக்கிய ரோலில் நடிக்கிறார். நாயகிகளாக நயன்தாரா, டாப்ஸி நடிக்கின்றனர். இந்த படத்தில் அஜித்தை மிகவும் இளமையாக காட்டப் போகிறாராம் விஷ்ணுவர்த்தன். இதற்காக தலைமுடி காஸ்ட்யூம் என எல்லாவற்றையும் மாற்றுகிறார்கள். அத்துடன் உடல் எடையை குறைக்கும்படியும் அஜித்தை கேட்டுக் கொண்டாராம் விஷ்ணு. இதனை ஏற்றுக் கொண்ட அஜித், கடந்த ஒரு வாரகாலமாக ஜிம்முக்கு செல்கிறார். தினமும் 5 மணி நேரம் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இத்தகவலை விஷ்ணுவர்தன் தனது வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அஜித்தின் உழைப்பை பார்த்து ரொம்ப வியந்து போனதாகவும் அவர் கூறியுள்ளார்.