சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை நடிகர் ரஜினிகாந்த் திடீரென சந்தித்துப் பேசினார்.
சென்னை கோபாலபுரம் இல்லத்துக்கு சனிக்கிழமை காலை 10.45 மணிக்கு வந்த ரஜினிகாந்த், கருணாநிதியைச் சந்தித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் கூறியது:
மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன். என்னுடைய உடல்நலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த பிறகு கருணாநிதியைச் சந்திக்கவில்லை. அதன் காரணமாகச் சந்தித்தேன். 89-வது பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தேன் என்றார்.
இந்தச் சந்திப்பின்போது திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் உடன் இருந்தார்.
அரசியல் சந்திப்பா... சட்டப்பேரவை பொதுத்தேர்தலின்போது ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆதரவு கேட்டார்.
இந்தத் தேர்தலில் ரஜினிகாந்த் அதிமுகவுக்கு வாக்களித்ததாகச் சொல்லப்பட்டது. இது தொடர்பாக அவர் ஏற்போ, மறுப்போ தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு ரஜினி சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதன் பின் கருணாநிதி - ரஜினிகாந்த் சந்திப்பு நிகழாமல் இருந்தது.
ஜூன் 3-ம் தேதி கருணாநிதியின் பிறந்த நாளின்போது பெங்களூரில் இருந்து ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்துத் தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்தச் சந்திப்பு நடந்ததால் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு ரஜினிகாந்த் சந்தித்ததாக முதலில் சொல்லப்பட்டது.
ஆனால் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றே தெரிகிறது.
ரஜினிகாந்தின் கோச்சடையான் படம் தொடர்பாகவும் கருணாநிதி கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது. -KRK NETWORK-