சென்னை: ஆரோக்கியமற்ற உணவைக் குறைத்துக் கொள்வதன் மூலம் சர்க்கரை நோயைத் தடுக்க முடியும் என்று அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் வி.சாந்தா கூறினார்.
சென்னையில் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெற்று ஆரோக்கியமாக வாழும் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோரை கௌரவிக்கும் நிகழ்ச்சி சென்னை ராயபுரம் எம்.வி. சர்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை மையம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் எம்.வி. சர்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை மையம் வழங்கும் 80 வயது முதியோருக்கு சர்க்கரை நோய்க்கான மருத்துவப் பரிசோதனைகள் கட்டணத்தில் 50 சதவீத சலுகைக்கான அட்டைகள் வழங்கி டாக்டர் வி.சாந்தா பேசியது:
80 வயதுக்கும் மேற்பட்டோர் சர்க்கரை நோயுடன் ஓரளவு ஆரோக்கிய வாழ்க்கையை வாழ்வதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியளிக்கிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை உலகம் முழுவதும் கவலை தரக்கூடிய வேகத்தில் அதிகரித்து வருகிறது.
சர்க்கரை நோயின் தலைநகரமாக இந்தியா மாறி வருகிறது. உடற்பயிற்சி இல்லாமை, உடல் பருமன், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் உள்ளிட்ட வாழ்வியல் கோளாறுகளே நீரிழிவு நோய்க்கு முக்கியமான காரணங்கள்.
எனவே ஆரோக்கியமற்ற உணவைக் குறைத்தல், உடற்பயிற்சி மற்றும் வாழ்வியல் மாற்றங்கள் ஆகியவை மூலம் சர்க்கரை நோயைத் தடுக்க முடியும்.
மேலும், மாணவர்களிடையே சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும். இப்படிச் செய்தால் நம் எதிர்கால சந்ததி, சர்க்கரை நோயற்ற தலைமுறையாக உருவாகும் என்றார் டாக்டர் வி.சாந்தா.
எம்.வி. சர்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை மையத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் விஜய் விஸ்வநாதன் கூறியதாவது:
எங்கள் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் ஆவணங்களை மறுஆய்வு செய்தபோது 80 வயதுக்கு மேற்பட்ட முதியோரில் 40 சதவீதத்தினர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு ஆரோக்கிமயாக வாழ்ந்து கொண்டிருப்பது தெரிய வந்தது.
இவர்களுள் 55 சதவீதத்தினர் இன்சுலின் ஊசி தேவையின்றி, மருந்துகளை மட்டும் சாப்பிட்டு வருகின்றனர்; 28 சதவீதத்தினர் சர்க்கரை நோய் பக்க விளைவுகள் பிரச்னை ஏதுமின்றியும், 2 சதவீதத்தினர் உடலுறுப்பு நீக்கப்பட்டும் வாழ்கின்றனர்.
எனவே, சர்க்கரை நோயாளிகள் முறையான சிகிச்சைகளை மேற்கொண்டால் நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்றார் டாக்டர் விஜய் விஸ்வநாதன். -KRK NETWORK-