புதுதில்லி, ஜூன்.17: சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களால் கடந்த 5 ஆண்டுகளில் போடப்பட்டுள்ள கறுப்புப் பணம் அதிகரித்துள்ளது. எனினும் அந்த வங்கிகளில் போடப்பட்டுள்ள மொத்த வெளிநாட்டுப் பணத்தை கணக்கில் இந்தியாவின் பங்கு 0.14 சதவீதமாக உள்ளது. இதனால் இதுபோன்று சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணம் வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 55-வது இடத்தில் உள்ளது.
2011-ம் ஆண்டு இறுதிக் கணக்கின்படி சுவிஸ் வங்கிகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தோர் சுமார் 1.53 டிரில்லியன் சுவிஸ் ஃபிராங்க்ஸ் முதலீடு செய்யப்பட்டுள்ளனர். இதில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 2.19 பில்லியன் சுவிஸ் ஃபிராங்க்ஸ்(அதாவது ரூ 12,700 கோடி) மட்டுமே வைத்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த பட்டியலில் 20 சதவீதத்துடன் இங்கிலாந்துதான் முதலிடம் வகிக்கிறது. அதற்கு அடுத்தபடியாக 18 சதவீதத்துடன் அமெரிக்கா இடம்பெற்றுள்ளது.
சுவிட்சர்லாந்தின் மத்திய வங்கியான சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்டுள்ள மிக நீண்ட தகவல் பட்டியலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. -KRK NETWORK-