தமிழ் திரையுலகில் இன்றைய காலகட்டத்தில் அதிக ரசிகர்கள் பட்டாளங்களை கொண்ட நடிகர் யாருனா? அதை சொல்லவே வேண்டாம், டக்னு ஞாபகத்துக்கு வருவது ரஜினிகாந்த்தாங்க. இப்படி அதிக ரசிகர்களை உள்ளடக்கிய ரஜினியின் ரசிகர்கள் பெரும்பாலனோர்தாங்க அஜீத் ரசிகர்களாக இருக்காங்னு சொன்னா அதை மறுக்கவே முடியாது. அதே போல அஜீத் ரசிகர்களில் பலர்தாங்க இன்று சிலம்பரசன் ரசிகர்கள்- அப்படி இந்த மூவருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கும் போது இந்த மூன்று பேருடைய படமும் ஒரே நேரத்தில் திரையில் மோத வருகிறதுனு சொன்னா, நீங்க நம்புவீங்களா. நம்பித்தான் ஆகனும். ஆமாங்க ரஜினி நடித்த கோச்சடையான், அஜீத் விஷ்ணுவர்த்தனுடம் இணையும் படம், மற்றும் சிலம்பரசனின் வாலு ஆகிய மூன்று திரைப்படங்களும ஒரே சமயத்தில், அதாவது தீபாவளி அன்று வெளியாகின்றன. அப்புறம் என்னங்க சரவெடிதான். மேலும் இதுல குறிப்பிடும்படி என்னனா? தீபாவளிக்கு வெளியாகும் அஜீத் திரைப்படத்தை முதல் ஷோ பார்ப்பேனு நடிகர் சிலம்பரசன் கூறியிருக்கார். -KRK NETWORK-