ஹைதராபாத், ஜூன்.17: கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்தன் ரெட்டியை ஜாமீனில் விடுவதற்கு கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜனார்தன் ரெட்டியை ஜாமீனில் விடுவிக்க சிபிஐ நீதிமன்ற நீதிபதி பட்டாபி ராமா ராவ் லஞ்சம் பெற்றதாக புகார் கூறப்பட்டது. இந்த புகாரை விசாரித்த ஆந்திர ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் பட்டாபி ராமாராவின் மகன் ரவிச்சந்திரனையும், ஓய்வுபெற்ற நீதிபதி டிவி.சலபதி ராவையும் கைது செய்தனர். -KRK NETWORK-