விருதுநகர், ஜூன்.17: பிறந்தநாள் சான்றிதழ் கொடுப்பதில் அதிகாரிகள் தாமதம் செய்ததால் விருதுநகரைச் சேர்ந்த ஒருவர் 100 ரூபாய்க்கு கேட்புக் காசோலை(டிடி) எடுத்து இதை லஞ்சமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று நகராட்சிக்கு அனுப்பினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.
விருதுநகரைச் சேர்ந்த பழனிச்சாமி தனது மகனுக்கு பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலை பெறுவதற்காக பிறந்தநாள் சான்றிதழ் கேட்டு மே 15-ம் தேதி விண்ணப்பித்துள்ளார். இதற்காக அவர் ரூ 55 கட்டணமாக செலுத்தியுள்ளார். 7 நாட்களுக்குள் சான்றிதழ் கிடைக்கும் என அப்போது தெரிவிக்கப்பட்டது. எனினும் 15 நாட்களாகியும் சான்றிதழ் கிடைக்கவில்லை. இதனிடையே நகராட்சியில் இந்த வேலைக்கு இவ்வளவு ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று உள்ளூர் காங்கிரஸார் வைத்த பேனர் ஒன்றைப் பார்த்த அவர் அந்த பேனரில் குறிப்பிட்டிருந்த ரூ 100-ஐ டிடி எடுத்து அதை நகராட்சிக்கு அனுப்பி இதை லஞ்சமாக வைத்துக் கொண்டு பிறந்தநாள் சான்றிதழைத் தாருங்கள் என்று கேட்டுக்கொண்டார். அதன் நகல் ஒன்றை மாவட்ட ஆட்சியர் பாலாஜிக்கும் அவர் அனுப்பினார்.
இதையடுத்து நேற்று அவரைச் சந்தித்த சுகாதாரத் துறை அதிகாரி பாஸ்கரன் மற்றும் நகராட்சித் தலைவர் சாந்தி ஆகியோர் அவரிடம் பிறந்தநாள் சான்றிதழை வழங்கினர். -KRK NETWORK-