சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பற்றி விமர்சனம் செய்ததாக சிலர் திசை திருப்புகிறார்கள் என்றும், அவரை எப்போதும் மதிக்கக் கூடியவன் நான் என்றும் திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
கேள்வி :- தி.மு. கழக ஆட்சி நடைபெற்ற போது, அந்த ஆட்சியின் திட்டங்களை எல்லாம் கடுமையாக விமர்சனம் செய்த பத்திரிகைகள், தற்போது அ.தி.மு.க. ஆட்சி நடைபெறும் நேரத்திலும், அந்த ஆட்சியின் திட்டங்களை விமர்சிக்காமல், தி.மு. கழகத்தையே தாக்கி விமர்சனம் செய்கிறார்களே?
கருணாநிதி :- எங்களால் கொடுக்க முடியவில்லை - விளம்பரங்களை!
கேள்வி :- தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசு தலைவர் தேர்தலில் ஒரு வேட்பாளரை நிறுத்தப் போவதாக தகவல் வந்திருக்கிறதே?
கருணாநிதி :- எனக்குத் தெரியாது.
கேள்வி :- உங்கள் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் அவர்களின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
கருணாநிதி :- பிரகாசமாக உள்ளது.
கேள்வி :- புதுக்கோட்டை இடைத் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிராக போட்டியிட்ட தே.மு.தி.க. வேட்பாளருக்கு “டெபாசிட்” கிடைத்திருப்பதைப் பற்றி?
கருணாநிதி :- அதற்கு விளக்கம் சொல்ல விரும்பவில்லை.
கேள்வி :- “கலாம்” என்ற வார்த்தைக்கு தமிழிலே உள்ள பொருளைப் பற்றி நீங்கள் கூறியதைத் திரித்து, அப்துல் கலாம் பற்றி விமர்சனம் செய்ததாக சிலர் திசை திருப்புவது பற்றி?
கருணாநிதி :- சில பேர், அதை திசை திருப்ப முயலுகிறார்கள். அப்துல் கலாம் வகித்த உயர்ந்த பதவி மீதும், அவர் மீதும் நான் வைத்துள்ள மதிப்பு, மரியாதை எத்தகையது என்பதை அவரே அறிவார். அவரை எப்போதும் மதிக்கக் கூடியவன் நான்.
கேள்வி :- கடந்த முறை குடியரசு தலைவர் வேட்பாளராக இருந்த பிரதிபா பட்டீல் முதன் முதலாக தமிழகத்திற்குத் தான் வாக்கு கேட்க வந்தார். அது போல இந்த முறையும் பிரணாப் தமிழகத்திற்கு வருவாரா?
கருணாநிதி :- வரும் 30ஆம் தேதியன்று சென்னைக்கு முதன் முதலாக வாக்காளர்களைச் சந்திப்பதற்காக பிரணாப் முகர்ஜி வருகிறார். அப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களையும், சட்ட மன்ற உறுப்பினர்களையும் சந்தித்து வாக்குகளைக் கேட்பார்.
அப்போது அவருக்கு வரவேற்பு அளிப்பதோடு - விருந்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன.
கேள்வி :- குடியரசு தலைவர் தேர்தல் குறித்து காங்கிரசில் குழப்பம் இருப்பதாக அத்வானி சொல்லியிருக்கிறாரே?
கருணாநிதி :- நோ கமெண்ட்ஸ். -KRK NETWORK-