உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

17 June 2012

இனி மம்தாவை கெஞ்சமாட்டோம்

புதுடில்லி:எதற்குமே ஒருஎல்லை உண்டு.எவ்வளவு தான் வளைந்து கொடுப்பது என காங். செய்தி தொடர்பாளர் , மம்தா மீது காட்டமாக பேசியுள்ளார். ஜனாதிபதி தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட பிரணாப் முகர்ஜியை ஏற்க, கூட்டணி கட்சியைச்சேர்ந்த மம்தா பானர்ஜி மறுத்தார். 

இதனை காங். ஏற்க தயாராக இல்‌லை. எனினும் காங். கட்சி பிரணாப்பை வேட்பாளராக அறிவித்தது. இந்நிலையில் காங். செய்தி ‌தொடர்பாளர் திக்விஜய்சி்ங், டி.வி. சானல் ஒன்றி்ற்கு அளித்த பேட்டியில், எங்களை பொறுத்தவரை திரிணாமுல் காங். கட்சியை நாங்களாக வெளியேற வற்புறுத்தமாட்ட‌ோம். விரும்பினால் அவர்களாக வெளியேறலாம். ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் அவரின் பிடிவாதம் சரியல்ல. 

நாங்களும் கூட்டணி கட்சி என்பதற்காக எவ்வளவு தான் வளைந்து கொடுப்பது. எதற்கும் ஒரு எல்லை உண்டு . அவரை இனிமேல் அவரிடம் ஆதரவு கேட்டு நாடி செல்லமாட்டோம் என்றார். 
 -KRK NETWORK-

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT