பெங்களூரு : பாலியல் புகார் மற்றும் நிரூபர்கள் தாக்கப்பட்ட வழக்கில் கர்நாடக அரசால் தேடப்பட்டு வந்த நித்யானந்தா நேற்று ராம்நகரம் மாவட்ட கோர்ட்டில் சரணடைந்தார். நேற்று அவருக்கு விதிக்கப்பட்ட ஒருநாள் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவதை அடுத்தது நித்யானந்தா இன்று பெங்களூரு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். இந்நிலையில் ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு கர்நாடக ஐகோர்ட்டில் கர்நாடக அரசு மீது நித்யானந்தா மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். ஆதாரமின்றி ஆசிரம செயல்பாடுகள் பற்றி தவறான தகவல்கள் வெளியிட்டதாகவும் நித்யானந்தா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். -KRK NETWORK-






