உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

17 June 2012

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு சமச்சீர் கல்வியால்


பொள்ளாச்சி: சமச்சீர் கல்வி முறை அமலால், மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி முறை அமலானது. இந்த முறையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் அரசு மற்றும் நகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.
இதுதொடர்பாக பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலர் குணசேகர் கூறுகையில், கடந்த ஆண்டுகளில் பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளை மெட்ரிக் பள்ளிகளில் சேர்க்கவே ஆர்வம் காட்டினர்.
சமச்சீர் கல்வி முறை அமலால் அரசு மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் ஒரேமுறையான பாடதிட்டம் என்பதால், பெற்றோர் பலர் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன்வந்துள்ளனர். இனிவரும் காலங்களில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் மேலும் அதிகரிக்கும் என்றார்.  -KRK NETWORK-

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT