உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

15 June 2012

டெபாசிட்டை தக்க வைத்தது தே.மு.தி.க.,


சென்னை: புதுக்கோட்டை இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று நடந்தது. 23 வது இறுதிச்சுற்றின்படி அ.தி.மு.க., வேட்பாளர் கார்த்திக்தொண்டைமான் 71 ஆயிரத்து 498 வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

மொத்தம் பதிவான ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 277 ஓட்டுகளில், அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் ஒரு லட்சத்து 1, 998 ஓட்டுகள் பெற்றார். அவருக்கு அடுத்து தே.மு.தி.க. வேட்பாளர் ஜாகீர் உசேன் 30 ஆயிரத்து 500 ஓட்டுகள் பெற்றார். இதன்மூலம் அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் 71 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் அ‌மோக வெற்றி பெற்றார். மொத்தம் பதிவான ஓட்டுக்களில் 6 ல் ஒரு மடங்கு பெற்று தே.மு.தி.க., தனது டெபாசிட் தொகையை தக்க வைத்தது. 

புதுக்கோட்டை எம்.எல்.ஏ., முத்துக்குமரன் சாலை விபத்தில் இறந்ததைத் தொடர்ந்து, அங்கு 12ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே வேட்பாளரை அறிவித்து, பிரசாரத்தை அ.தி.மு.க., துவங்கியது. தி.மு.க., - காங்கிரஸ் - ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன. எதிர்க்கட்சியான தே.மு.தி.க., நீண்ட ஆலோசனைக்குப் பின், வேட்பாளரை களமிறக்கியது.



தீவிர பிரசாரம்: இதனால், அ.தி.மு.க., - தே.மு.தி.க., இடையே நேரடி போட்டி ஏற்பட்டது. 32 அமைச்சர்கள் உட்பட 52 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்து, அ.தி.மு.க., பிரசாரம் மேற்கொண்டது. முதல்வர் ஜெயலலிதா ஒருநாள் பிரசாரம் மேற்கொண்டார். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் புதுக்கோட்டையில் முகாமிட்டு பிரசாரம் செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தே.மு.தி.க., வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டது. பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் இன்றி நடந்து முடிந்த இடைத்தேர்தலில், 1 லட்சத்து 47 ஆயிரத்து 277 பேர் ஓட்டளித்துள்ளனர்.  -KRK NETWORK-

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT