உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

17 June 2012

கரீனா கபூரை இழுக்கும் எஸ்.ஜே.சூர்யா!

பாலிவுட்டின் முன்னணி நடிகை கரீனா கபூரை தன்னுடைய படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட வைக்க தீவிர முயற்சியில் இறங்கி இருக்கிறராம் எஸ்.ஜே.சூர்யா. வாலி, குஷி, நியூ, அன்பே ஆருயிரே போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் எஸ்.ஜே.சூர்யா, சில காலம் டைரக்ஷனுக்கு ஓய்வு விட்டு சில படங்களில் ஹீரோவாக வலம் வந்த அவர், தற்போது மீண்டும் ஒரு படத்தை இயக்கி, தயாரிக்கவும் செய்வதோடு அப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாக இருக்கிறார். இப்படத்திற்கு இசை என்று பெயர் வைத்துள்ளார். படத்தின் நாயகனாக அவரே நடிக்க அவருக்கு ஜோடியாக சாவித்திரி என்ற புதுமுகத்தை அறிமுகம் செய்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருகையில், படத்தில் ஒரு பாட்டுக்கு இந்தியில் கொடிகட்டிப் பறக்கும் கரீனா கபூரை தனது இசை படத்தில் ஒரு பாடலுக்கு ஆட வைக்கப் போகிறாராம். இதற்காக கரீனாவிடம் சூர்யா பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.   -KRK NETWORK-

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT