கோட்டயம் : கழிப்பறையில் மாட்டிக் கொண்டு தவித்த வயதான தம்பதியினர் 3 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. 74 வயதான ஜோசப்பும், 72 வயதான அவரது மனைவி இலியம்மாவும் தனியாக வசிக்கின்றனர். இந்த தம்பதியரின் 2 மகன்களில் ஒருவர் வெளிநாட்டிலும், ஒருவர் ஐதராபாத்திலும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இவர்களது வீட்டின் கழிப்பறையில் இருந்த தாழ்பாள் இறுகிக் கொண்டதால், கதவை திறக்க முடியாமல் மாட்டிக் கொண்டுள்ளனர். வீட்டில் தனியாக வசித்த வந்த இருவரும் கதவை திறக்க பெரிதும் முயன்றுள்ளனர். அழுதும், சத்தமிட்டும் பலனலிக்காமல் இருந்துள்ளனர். 3 நாட்களாகியும் வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகத்தின் பேரில் அக்கம் பக்கத்தினர் வீட்டை திறந்து அவர்களை மீட்டுள்ளனர். தற்போது இருவரும் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-KRK NETWORK-
-KRK NETWORK-






