ஜனாதிபதி வேட்பாளர் குறித்து டில்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பின்னர் அவர் பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ஜனாதிபதி பதவிக்கு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி காங்கிரசின் முதல் விருப்பமாக உள்ளார். துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி இரண்டாவது விருப்பமாக உள்ளார். இது குறித்து தான் எந்தவித உறுதிமொழியும் தரவில்லை. கட்சி தலைவர்கள் மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவுடன் ஆலோசனை செய்ய உள்ளதாக மம்தா கூறினார்.
டில்லியில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து முலாயம், மம்தா ஆலோசனை செய்தனர். இதன் பின்னர் முலாயம் கூறுகையில், ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மற்றும் லோக்சபா முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோரது பெயர்கள் குறித்து ஆலோசனை செய்தததாக கூறினார். -KRK NETWORK-