ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை அடுத்தும் இயக்குநர் எம்.ராஜேஷின் இயக்கத்தில் தான் நடிப்பது என்பதில் உறுதியாக இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்! ஆனால் இயக்குநர் ராஜேஷோ, ஏற்கனவே இயக்கிய மூன்று படங்களும், ஒரே சாயலில் இருப்பதாக ஒரு குற்றச்சாட்டிற்கு (சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி) ஆளாகி இருப்பதால் இரண்டு படங்களை வேறு பட நிறுவனங்கள், வேறு கதாநாயகர்களை வைத்து இயக்கி முடித்துவிட்டு அதன்பிறகு பார்ப்போம் என்று கூறி விட்டாராம்! அப்படியென்றால் அதுவரை படத்தயாரிப்பு மட்டும்தான்... என தளர்ந்து போய் கையை பிசைந்து கொண்டிருக்கிறாராம் உதயநிதி! -KRK NETWORK-






