புதுடில்லி: கிராமங்களில் வசிக்கும் ஒரு குடிமகன் நாள் ஒன்றுக்கு ரூ.28 சம்பாதித்தால் அவர் ஏழைகளல்ல என கூறிய மத்திய திட்டக்கமிஷன், டில்லியில் இரண்டு கழிவறைகளை புதுப்பிக்க 35 லட்ச ரூபாய் செலவு செய்துள்ளது தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
இதில் கழிவறைகளை புதுப்பிக்க 30 லட்ச ரூபாயும், கழிவறைகளில் நவீன முறையிலான கதவு அமைக்க ரூ.5.19 லட்ச ரூபாயும் செலவழித்துள்ளது. இந்த கதவு பொருத்தப்பட்ட கழிவறைகளை ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தி தான் பயன்படுத்த முடியும்.
சுபாஷ் அகர்வால் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்ட தகவலுக்கு, ஆணையம் அளித்த பதிலில் இரண்டு கழிவறைகளுக்கு நவீன கதவு பொருத்த ரூ.5,19,426 ரூபாயும், அந்த கழிவறைகளை புதுப்பிக்க ரூ. 30,00,305 செலவிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இந்த கழிவறைகளை பயன்படுத்த திட்டக்குழுவில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு 60 ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் அந்த கழிவறை பகுதிகளில் சிறுசிறு திருட்டுக்களை தடுக்க, அங்கு செல்லும் வழியில் கண்காணிப்பு கேமராவை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், கழிவறைகளுக்கான செலவீனங்களுக்கு மத்திய பொதுப்பணித்துறை அலுவலகம் அனுமதி கோரியதாகவும் திட்டக்குழு அதிகாரி ஒருவர் கூறினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திட்டக்கமிஷன் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி கிராமங்களில் வசிக்கும் ஒரு குடிமகன் நாள் ஒன்றுக்கு 22 ரூபாயும், அதுவே நகர்ப்புறமாக இருந்தால் குறிப்பிட்ட குடிமகன் நாளொன்றுக்கு 28 ரூபாயும் சம்பாதிக்கும் பட்சத்தில் அவர்கள் ஏழைகளல்ல எனக்கூறப்பட்டிருந்தது. இவர்கள் எல்லாம் இனிமேல் அரசாங்கத்தில் வரையறுக்கப்பட்ட வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிப்போராக கருதப்பட மாட்டார்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதனால் திட்டக்குழு தலைவர் அலுவாலியா சர்ச்சையில் சிக்கினார்.
வறுமைக்கோடு கீழ் உள்ளவர்களின் ஊதியம் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய திட்டக்குழு தலைவர் அலுவாலியா, கடந்த 2011ம் வருடம் மே முதல் அலுவாலியா, வெளிநாட்டு பயணங்களுக்கு தினந்தோறும் ரூ.2.02 லட்ச ரூபாய் செலவழித்துள்ளதாகவும், கடந்த ஜூன் 2004- ஜனவரி 2011 ஆண்டு மத்தியில் 274 நாட்களில் 42 அரசு முறை பயணங்கள் மேற்கொண்டதில் 2.34 கோடி செலவழித்துள்ளதும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது.
வெளிநாட்டு பயணம் குறித்து கூறிய அலுவாலியா, அலுவலக பணிகளை மேற்கொள்ள வெளிநாட்டு பயணம் அவசியம் என கூறினார்.
-KRK NETWORK-