சென்னை:தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்த ஞானமுத்து என்பவர் தாக்கல் செய்த மனுவில், "தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், கடந்த பிப்ரவரியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதில், தமிழக முதல்வரைப் பற்றி அவதூறாக விமர்சித்திருந்தார். அவர் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி, கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். புகாரை பதிவு செய்யவில்லை. என் புகாரை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்' என கூறியுள்ளார். இம்மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், விளம்பரத்துக்காக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும், தென்சென்னை மாவட்ட தே.மு.தி.க., வழக்கறிஞர்கள் பிரிவு செயலர் நமோ நாராயணன், ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.இம்மனுக்கள், நீதிபதி நாகமுத்து முன் விசாரணைக்கு வந்தன. ஞானமுத்து சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, தனது கட்சிக்காரர் அறிவுறுத்தலின்படி மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். இதையடுத்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டார். -KRK NETWORK-






