விக்கும், டோப்பாவுமாக கதாநாயகராக காமெடி பண்ணிவரும் அந்த சித்த வைத்திய டாக்டர் நடிகரின் நான்கைந்து வீட்டிலும், சித்த மருத்துவம், சினிமா அலுவலகங்களிலும் சமீபத்தில் நடந்த வருமானவரித்துறை ரெய்டில் சுமார் ரூ.50 கோடிக்கும் மேல் கணக்கில் வராமல் கரன்சியும், சொத்துபத்துகளும், நகை, நட்டுகளும் அள்ளிக்கொண்டுபோய் விட்டார்களாம்! அதனால் சற்றே நொடித்து போயிருக்கும் காமெடி டாக்டர், மீண்டும் படத்தயாரிப்பு, நடிப்பில் துட்டோடு வந்து கொட்டமடிப்பேன் என்று நொந்துபோகமால் சூளுரைத்தபடி கோலிவுட்டையே கூச்சம் நாச்சமில்லாமல் உலா வருகிறாராம்! அட சீனிவாசா!! -KRK NETWORK-






