உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

11 June 2012

கிரிக்கெட் வீரர் தற்கொலை

சென்னை:கிரிக்கெட் வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.கோடம்பாக்கம் அடுத்த டிரஸ்ட்புரம் அபராபாத் தெருவைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் தர்மன்,21. பொறியியல் மாணவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் தமிழக அணிக்காக விளையாடியவர். கிரிக்கெட்டில் அதீத ஆர்வம் கொண்ட இவர், இந்திய அணியில் விளையாட வேண்டும் என, பயிற்சி எடுத்து வந்துள்ளார். நேற்று முன் தினம், சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடியபோது, இவரது அணி தோல்வியடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. மன உளைச்சலுடன் இருந்துள்ளார். நேற்று மாலை வீட்டு முதல் மாடியில், மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கோடம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.  -KRK NETWORK-

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT