உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

11 June 2012

நடிகர் அஜித் எனக்கு வாழ்வு தந்தவர் - ஏ.ஆர்.முருகதாஸ்

சினிமாவில் எனக்கு வாழ்வு தந்தவர் நடிகர் அஜித் என்று புகழாரம் சூட்டியுள்ளார் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ். அஜித்தின் தீனா படம் மூலம் இயக்குநராக அவதரித்தவர் ஏ.ஆர்.முருகதாஸ், தொடர்ந்து ரமணா, கஜினி, 7ம் அறிவு போன்ற வெற்றி படங்களை இயக்கிய முருகதாஸ், தெலுங்கிலும் சிரஞ்சீ‌வியை வைத்து இரண்டு படமும், இந்தியில் அமீர்கானை வைத்து கஜினியையும் எடுத்து வெற்றி பெற்றார்.

இந்நிலையில் தான் கடந்த வந்த சினிமா பாதை குறித்து முருகதாஸ் கூறியுள்ளதாவது, பாலிவுட்டில் என்னை ஒரு இயக்குநராக, அதிலும் வெற்றி இயக்குநராக பார்க்க கஷ்டப்படுகிறார்கள். 6 படங்களை இயக்கிய பின்னரே இப்படி என்றால், நான் சினிமாவில் அறிமுகமாகி இருக்கும் போது என் நிலைமை யோசித்து பாருங்கள். நான் என்னுடைய முதல் படமான தீனாவை இயக்கிபோது அஜித் என்னை வேண்டாம் என்று ஒதுக்கவில்லை. என்மீது நம்பிக்கை வைத்து நடித்தார். தீனா படமும் சூப்பர் ஹிட்டானது. இன்று குறிப்பிட்டு சொல்லும்படியான இயக்குநர்களில் நானும் இருக்கிறேன் என்றால் அதற்கு அஜித்தும் ஒரு காரணம். சினிமாவில் எனக்கு வாழ்வு கொடுத்தவர் அவர் என்றார்.

மேலும் துப்பாக்கியில் விஜய்யுடன் பணியாற்றுவது குறித்து முருகதாஸ் கூறுகையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் படம் தவிர்த்து வேறு எந்த விஷயத்தையும் விஜய், யாரிடமும் பேசமாட்டார். ஆனால் என்னிடம் மட்டும் தன்னுடைய சொந்த விஷயங்களையும் பகிர்ந்து கொள்வார். அந்தளவுக்கு நானும், அவரும் நல்ல நண்பர்கள் என்று கூறியுள்ளார். 
 -KRK NETWORK-

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT