உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

11 June 2012

அஜித் - கார்த்தி மோதல்...!

தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்புடன் ரிலீஸ்க்கு தயாராகி வரும் இரண்டு படங்கள் பில்லா-2 மற்றும் சகுனி. அஜித் மற்றும் கார்த்தி படங்களான இந்த இரண்டு படங்களும் விஜய் பிறந்தநாளில் ரிலீஸ் ஆகபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பில்லா படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் நடிப்பில், அதன் 2ம் பாகமாக உருவாகி இருக்கும் படம் பில்லா-2. அஜித் ஜோடியாக பார்வதி ஓமனக்குட்டன், புரூனா அப்துல்லா ஆகியோர் நடித்துள்ளனர். அஜித்தின் மிரட்டலான நடிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை சக்ரி டோல்ட்டி இயக்கியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. அதேபோல் கார்த்தி-ப்ரனீதா நடிப்பில் புதுமுகம் ஷங்கர் தயாளன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் சகுனி. இந்தபடமும் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது. அஜித் படத்திற்கு சமமாக கார்த்தியின் சகுனி படமும் விலை போய் உள்ளது. இதனால் இந்த இரண்டு படமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தற்போது பில்லா-2 மற்றும் சகுனி ஆகிய இரண்டு படங்களும் சென்சார் போர்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் பில்லா-2 படத்திற்கு இந்தவாரத்திற்கு சென்சார் கிடைத்துவிடும் என்பதாலல் வருகிற ஜூன் 22ம் தேதி, விஜய் பிறந்தநாளில் பில்லா-2 ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டன.

இந்நிலையில் ஜூலை 7ம் தேதி சகுனி படத்தை வெளியிட இருந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இப்போது சகுனியையும் விஜய் பிறந்தநாளில் அஜித் படத்தோடு சேர்த்து ரிலீஸ் செய்ய முடிவெடுத்து இருக்கிறாராம். இதுகுறித்து ஞானவேல்ராஜா கூறியுள்ளதாவது, சகுனி படத்திற்கு இன்னும் ஓரிரு நாளில் தணிக்கை சான்று கிடைத்துவிடும். நிச்சயமாக எங்கள் படத்திற்கு யு சான்று கிடைக்கும் என்று நம்புகிறோம். தற்போது படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. படத்தை ஜூன் 22ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளோம் என்று கூறியுள்ளார்.

அஜித் - கார்த்தி ஆகிய இருவரது படங்கள் நேரடியாக மோதுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 
 -KRK NETWORK-

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT