தங்களுக்குள் காதல் இல்லை என்று தொடர்ந்து சொல்லி கொண்டு, எல்லா இடங்களுக்கும் ஒன்றாக சுற்றி திரிந்த அமலாபாலும், டைரக்டர் விஜய்யும் இப்போது டூ போட்டு விட்டு பிரிந்து விட்டார்களாம். தெய்வத்திருமகள் படத்தில் அமலாபாலை நடிக்க வைத்தார் டைரக்டர் விஜய். அப்போது இருந்தே இருவருக்குள்ளும் நெருக்கம் ஏற்பட்டது. விஜய்யின் எல்லா குடும்ப நிகழ்ச்சிகளிலும் அமலாபாலை முதல் ஆளாக பார்க்க முடிந்தது. மேலும் அமலாபால்க்கு, விஜய் வீடு கூட வாங்கி கொடுத்தாக ஒரு தகவல் உண்டு. இதனையடுத்து இருவரும் காதலிப்பதாக மீடியாக்களில் பரவலாக செய்திகள் வந்தது. ஆனால் இதை இருவருமே மறுத்துவந்தனர். அதேசமயம் இவர்களது காதலுக்கு இருவரது வீட்டிலும் சம்மதம் என்று கூட கூறப்பட்டது.
இந்நிலையில் இவர்களுக்கு இடையே திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களது காதல் முறிந்துவிட்டதாம் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விஜய்க்கு வேறு இடத்தில் பெண் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் ஷூட்டிங்கிற்காக லண்டன் சென்றபோது விஜய்யிடம், அமலாபால் பேச மறுத்துவிட்டாராம். அப்போது இருந்தே இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டதாகவும், தெலுங்கு சினிமாவே கதி என்று அமலா பால் கிடப்பதன் பின்னணியும் கூட, விஜய்யுடனான காதல் முறிவுக்கு காரணம் என்கிறார்கள் கோடம்பாக்கத்தினர். -KRK NETWORK-