முகமூடி படத்தின் சண்டைக்காட்சியில் ஜீவாவிற்கு கழுத்தில் பலத்த அடிப்பட்டதால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. மிஸ்கின் தன்னுடைய கனவு படமான முகமூடி படத்தை நடிகர் ஜீவாவை வைத்து இயக்கி வருகிறார். இப்படத்தில் ஜீவா ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். நரேன் வில்லனாக நடிக்கிறார். ஹாலிவுட்டின் சூப்பர்மேன் போன்ற கதையம்சம் கொண்ட கதை இது. இதனால் படத்தில் நிறைய சாகசங்களை வைத்துள்ளார் டைரக்டர் மிஸ்கின். இதற்காக ஹாங்காங்கை சேர்ந்த பிரபல சண்டைக்கலைஞரை வரவழைத்து இப்படத்தின் சண்டைக்காட்சியை படமாக்கி வருகிறார். தற்போது முகமூடி படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த ஒரு மாதமாக சண்டைக்காட்சிகளை படமாக்கி வருகின்றனர் முகமூடி படக்குழுவினர். இதில், வில்லன் நரேன் மற்றும் அவரது குழுவினர் ஜீவாவுடன் மோதும் சண்டைக்காட்சிகளை படமாக்கி வந்தனர். நேற்று முன்தினம் படப்பிடிப்பு முடிவடையப்போகும் தருணத்தில் ஜீவா கழுத்தில் பலத்த அடிபட்டது. ஒரு ஸ்டண்ட் நடிகர் தனது காலினால் ஜீவாவை ஓங்கி உதைப்பது போன்ற காட்சியில், தவறுதலாக நிஜமாகவே ஜீவா கழுத்தில் உதைத்துவிட்டார். இதனால் ஜீவா கழுத்தில் பலத்த அடிபட்டது. இதனையடுத்து வலியால் துடித்த ஜீவா உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜீவாவை பரிசோதித்த டாக்டர்கள், அவரை சில வாரம் ஓய்வெடுக்க சொல்லி அறிவுறுத்தியுள்ளனர். ஜீவாவிற்கு அடிபட்டதால் தற்காலிகமாக முகமூடி படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. -KRK NETWORK-