உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

07 June 2012

ஏ.டி.எம்.,மில் கள்ள நோட்டு

நாகப்பட்டினம் : நாகை கலெக்டர் அலுவலக வாயிலில் உள்ள, எஸ்.பி.ஐ., வங்கியின் ஏ.டி.எம்., இயந்திரத்தில், கள்ள நோட்டுகள் வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. நாகை கலெக்டர் அலுவலக வாயிலில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிக்கான, தானியங்கி பணம் எடுக்கும் ஏ.டி.எம்., மையம் உள்ளது. அதில், நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த, இறால் வியாபாரி வெற்றி செல்வன், 37, என்பவர், நேற்று காலை, பத்தாயிரம் ரூபாய் பணம் எடுத்தார். 500 ரூபாய் நோட்டுகளாக, 20 நோட்டுகள் வந்ததில், மூன்று, கள்ள நோட்டுகள் என்பது தெரிந்தது. ஒரே சீரியலில் நோட்டுகள் இருந்ததால், கள்ள நோட்டுகள் என்பதை உறுதி செய்த வெற்றி செல்வன், ஏ.டி.எம்., மைய பாதுகாவலரிடம் கேட்டுள்ளார். திருவாரூரில் உள்ள வங்கி கிளையை அணுகுமாறு அவர் கூறியதை அடுத்து, வெற்றி செல்வன், நாகூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.  -KRK NETWORK-

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT