குன்னூர் : குன்னூர் சிம்ஸ் பூங்காவில் அலங்கரிக்க பயன்படுத்தப்பட்ட மூன்று டன் பழங்கள், நேற்று குழி தோண்டி புதைக்கப் பட்டன. நீலகிரியில், மே மாதம் முழுவதும் நடைபெற்ற கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியாக, குன்னூர் சிம்ஸ் பூங்காவில், கடந்த 26, 27 தேதிகளில் பழக்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில், நீலகிரி பழங்கள் உட்பட பல மாவட்டங்களில் இருந்து, 60 வகையான பழங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. பூங்கா முகப்பில் மா, பலா, வாழை உட்பட பல வகை பழங்களை கொண்டு, சுமார் 20 அடி உயரத்துக்கு பிரமாண்ட நுழைவு வாயில், பூங்கா முகப்பில் 18 அடி உயரம், 16 அடி நீளத்தில், மூன்று டன் சாத்துக்குடி மற்றும் இதர பழங்களை கொண்டு, தாஜ்மகாலின் தோற்றம் அமைக்கப் பட்டிருந்தது.
கடந்த ஒரு வாரமாக வைக்கப்பட்ட இந்த பழங்கள், தற்போது அழுகத் துவங்கியுள்ளன. மேலும், சுற்றுலாப் பயணிகளின் கூட்டமும் குறைந்து வருகிறது. அலங்கார பழங்களை மீண்டும் பயன்படுத்த முடியாது என்பதால், அவற்றை அழிக்க பூங்கா அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர். அதன்படி, பழக் கண்காட்சிக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று டன் பழங்கள், சிம்ஸ் பூங்காவிலேயே நேற்று குழி தோண்டி புதைக்கப் பட்டன. -KRK NETWORK-