ஸ்ரீபெரும்புதூரில் ஒரு தொழிற்சாலையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாரிமுத்து, அபிராமி வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் இருவரும் ஸ்ரீபெரும்புதூரில் தனித்தனியே வீடு எடுத்து தங்கி உள்ளனர்.
மாரிமுத்துக்கு அபிராமி மீது காதல் ஏற்பட்டது. ஆனால் அவர் காதலை அபிராமி ஏற்றுக் கொள்ளவில்லை. என்றாலும் அபிராமியை மாரிமுத்து ஒருதலையாக காதலித்து வந்தார். இதை அறிந்த அபிராமி, மாரிமுத்துவிடம் பேசாமல் ஒதுங்க தொடங்கினார்.
நேற்று அவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தன் சொந்த ஊரான அம்மன்புரம் செல்ல புறப்பட்டார். அபிராமி ஊருக்கு சென்று விட்டால், இனி திரும்பி வர மாட்டார் என்று மாரிமுத்து நினைத்தார். ஆத்திரம் அடைந்த அவர் அபிராமி வீட்டில் இருந்து வெளியில் வந்தபோது அவள் முகம், கழுத்தில் பிளேடால் கீறினார். ரத்தம் வழிந்தோட அபிராமி கதறினார். மாரிமுத்து தப்பி ஓடி விட்டார்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அபிராமி இதுபற்றி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மாரிமுத்து கைது செய்யப்பட்டார். ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் பிறகு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். -KRK NETWORK-