இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கும் துப்பாக்கி படத்தின் ஷூட்டிங் லண்டனில் நடைபெற்று வருகிறது. துப்பாக்கி படத்தின் கடைசிகட்ட படிப்பிடிப்பை லண்டனில் உள்ள முக்கிய பகுதிகளில் படமாக்கிக் கொண்டிருக்கிறது துப்பாக்கி டீம்.
படப்பிடிப்பின் போது விஜய்க்கு காயம் ஏற்பட்டுவிட்டதாம். ஆக்ஷன் காட்சியை படமாக்கிகொண்டிருக்கும் போது ஏற்பட்ட இந்த எதிர்பாராத விபத்தில் விஜய்யின் முட்டியில் அடிபட்டிருக்கிறது.
லண்டனில் உள்ள மருத்துவமனையில் விஜய் சிகிச்சை பெற்று வருவதாகவும், காயம் பயப்படும்படி இல்லை எனவும் தெரிகிறது. ஓரிரு நாட்களில் விஜய் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என மருத்துவர்கள் கூறியிருக்கின்றனராம்.
லண்டனில் நடக்கும் ’மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழா’வில் விஜய் கலந்து கொள்ள இருந்தது, எதிர்பாராமல் ஏற்பட்ட இந்த காயத்தினால் ரத்து செய்யப்படலாம். -KRK NETWORK-






