சென்னை: கல்லூரிகள் துவங்க உள்ள நிலையில், புதிதாக சேரும் மாணவர்களை, மூத்த மாணவர்கள் ராகிங் செய்வதை தடுக்கும் வகையில் பல நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுத்துள்ளனர்.
இது குறித்து தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜார்ஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்களில் ராகிங்கை தடுக்க அனைத்து நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் விழிப்புணர்வுடன் பணியாற்றுமாறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், www.tnpolice.gov.in என்ற காவல்துறையின் இணையதளம் வாயிலாகவும் மாணவ, மாணவிகள் ராகிங் குறித்த புகார்களை அளிக்கலாம். அதேப்போல raggingcomplaints@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியும் ராகிங் குறித்து புகார் அளிக்க பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புகார்களைப் பெற கமிஷனரகங்கள், மாவட்ட எஸ்பிக்களுக்கு தனியாக செல்பேசி எண் வழங்கப்படும்.மேலும், கல்லூரி, கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாக வந்து காவல்துறையினர் மாணவர்கள் மற்றும் பணியாளர்களுடன் கலந்துரையாட உள்ளனர்.
கல்வி நிலையங்களில் ராகிங் குறித்து புகார்களைப் பெற புகார் பெட்டி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினரின் புகார் தடுப்பு செல்பேசி எண்களுக்கு குறுந்தகவலிலும் புகார்களை அனுப்பலாம். புகார் கொடுப்பவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். -KRK NETWORK-