உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

06 June 2012

நித்தியானந்தா சீடர்களை தாக்கியவர்களுக்கு ஜாமின்

தஞ்சாவூர்: நித்தியானந்தா சீடர்களை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு தஞ்சாவூர் நீதிம்ன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. மதுரை ஆதினத்திறகு சொந்தமான அக்னீஸ்வரர் கோவில் கும்பகோணம் அருகே கஞ்‌சனூரில் உள்ளது. இந்த கோவில் கணக்கு வழக்‌குகளை பார்ப்பதற்காக சீடர்கள் ஹம்சானந்தா, பரமானந்தா ஆகியோர் சென்றனர். அப்போது கஞ்சனூரை சேர்ந்த மதுரை ஆதீன மீ்ட்புக்குழுவை சேர்ந்த தங்கநடராஜன், மணிகண்டன், பிரபு, சக்திமுருகன் உள்ளிட்ட ஐந்து பேர் தாக்கியதாக சீடர்கள் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் மேற்கண்ட ஐந்துபேர் மீதும் திருப்பனந்தாள் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் முன்ஜாமின் வழங்க கோரி தஞ்சை மாவட்ட முதன்‌மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர் நீதிபதி சரவணன் ஐந்து பேருக்கும் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.  -KRK NETWORK-

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT