சட்டம் ஒரு இருட்டறை படத்தின் ரீ-மேக்கில் ஹீரோ விக்ரம் பிரபு விலகியதையடுத்து, ஹீரோயின் கார்த்திகாவும் விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் விஜயகாந்துக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி தந்த படம் சட்டம் ஒரு இருட்டறை. விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் இப்படம் மீண்டும் ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது. இதில் ஹீரோவாக பிரபுவின் மகன் விக்ரமும், ஹீரோயினாக கோ கார்த்திகாவும், இன்னொரு முக்கிய ரோலில் ரீமா சென்னும் நடிக்க ஒப்பந்தமாகினர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில், படத்தின் ஹீரோ விக்ரம் பிரபு திடீரென விலகி கொண்டார். இதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இதனையடுத்து வேறுஒருவரை நடிக்க வைக்க படக்குழுவினர் முயற்சி செய்து வருகின்றனர். ஏற்கனவே விக்ரம் விலகியது படக்குழுவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இப்போது கார்த்திகாவும் இப்படத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னணி ஹீரோக்களுடன், நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வரும் கார்த்திகாவுக்கு, விக்ரம் விலகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் புதுமுகம் ஒருவருடன் நடிக்க கார்த்திகா தயக்கம் காட்டுவதாகவும், இதனால் அவரும் இப்படத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. -KRK NETWORK-